செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 27 நவம்பர் 2021 (14:35 IST)

எதற்கும் துணிந்தவன் படத்தோடு மோதுகிறதா யானை?

ஹரி இயக்கத்தில் அவரின் மைத்துனர் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் யானை. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படம் வெளிவரும் நாளன்று ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை திரைப்படமும் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. யானை படத்தில் அருண் விஜய்யோடு சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிங்கம் 3 மற்றும் சாமி 2 ஆகிய படங்களின் தோல்விக்குப் பின் ஹரி எப்படியும் ஒரு வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த படத்தில் கடினமாக உழைத்திருக்கிறார்.