உலகின் அருவருக்கத்தக்க, மோசமான ஆண்கள் நாம்... சித்தார்த் காட்டம்

Sasikala| Last Updated: திங்கள், 9 ஜனவரி 2017 (10:47 IST)
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெங்களூருவின் பல இடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்குள்ளாயினர். வெட்கி  தலைகுனிய வேண்டிய இந்த நிகழ்வு பற்றி குறிப்பிட்ட கர்நாடக அமைச்சர் ஒருவர், பெண்கள் மேற்கத்திய உடைகள் அணிவதாலேயே இத்தகைய பாலியல் அத்துமீறல் நடைபெறுகிறது என்று உளறினார். அவருக்கு நடிகர் சித்தார்த் கடுமையான மறுப்பை வெளியிட்டுள்ளார்.

 
"இந்த உலகத்திலேயே அருவருக்கத்தக்க மோசமான ஆண்களில் நாமும் இருக்கிறோம். நான் வெட்கி தலைகுனிகிறேன்.  மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஒரு பெண் தான் நினைக்கும் ஆடையை அணிய வேண்டும். அதை தவறாக நினைப்பது  உடனடியாக நிற்க வேண்டும். பெண்களின் ஆடைகள் குறித்த போதனைகளை நிறுத்துங்கள்" என்று அவர் காட்டமாக  கூறியுள்ளார்.
 
மேலும், "நீங்கள் ஒன்றை பார்ப்பதனால் மட்டுமே அதை நீங்கள் சொந்தம் கொண்டாடும் உரிமை உங்களுக்கு வந்துவிடாது.  உங்கள் பார்வையை மாற்றுங்கள். கண்ணுக்கு முன் இருப்பதை மாற்றவேண்டும் என நினைப்பதை நிறுத்துங்கள்" என்று தனது  ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :