வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 25 ஜூன் 2022 (16:07 IST)

சினிமாவில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் வளர்ந்துள்ளனர்- முன்னணி நடிகை

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா  கசாண்ட்ரா. இவர் தற்போது, ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில்  ஆஹா ஓடிடி தளத்தில் ஒரு  ஹாரர் தொடரில் நடித்துள்ளார். இத்தொடரை  மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ளது.

இத்தொடர் வரும் ஜூலை 1 ஆம், தேதி வெளியாகவுள்ளது. இதுகுறித்த புரோமோஷன் நிகழ்ச்சியில் ரெனினா கலந்துகொண்டார். அப்போது, அவர் கூறியதாவது:  நான் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில், பெண்கள் மிகவும் குறைவாக இருந்தனர். தற்போது ஆண்களுக்கு இணையாக பெண்கள் வளர்த்துள்ளனர். பல பெண்கள் இணைந்து இத்தொடரை உருவாக்கியுள்ளோம். பல்லவி கமர்ஷியல்இல் இயக்குனராக வளர்வார் எனத் தெரிவித்துள்ளார்.