விக்ரம்பிரபு படத்துடன் வெளியாகும் ‘விவேகம்’ டீஸர்
அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தின் டீஸர், விக்ரம்பிரபு படத்துடன் தியேட்டரில் ரிலீஸாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘விவேகம்’. அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி இந்தப் படத்தின் டீஸர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை டீஸர் ரிலீஸாகவில்லை. அதற்கான காரணத்தையும் படக்குழுவினர் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், விக்ரம்பிரபு நடித்த ‘சத்ரியன்’ படத்துடன் ‘விவேகம்’ டீஸர் தியேட்டரில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரம்பிரபு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். மேலும், விஜய் டி.வி. கவின், ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒருவழியாக, ‘விவேகம்’ படத்தின் டீஸர் வெளியாகும் தேதி தெரிந்துவிட்டதால், அஜீத் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இதனால், விக்ரம்பிரபு படத்துக்கும் விளம்பரம் கிடைத்துள்ளது.