Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிந்து மாதவியுடன் காதல் குறித்து விளக்கம் தரும் வருண் மணியன்!

Sasikala| Last Modified வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (18:03 IST)
த்ரிஷாவுடன் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்ட தொழிலதிபர் வருண் மணியன் தற்போது த்ரிஷா இல்லைனா பிந்து மாதவி  என்று தற்போது பிந்து மாதவியோடு பிஸியாக உள்ளார் போன்ற செய்திகள் வலைதலங்களில் பரவியது.

 
பிந்து மாதவியும், வருண் மணியனும் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பிந்துவே ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.  வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தவர்கள் அவரும், வருண் மணியனும் காதலிப்பதாக நினைத்தார்கள். இதற்கிடையே பிந்து  மாதவி அந்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டார்.
 
நடிகை பிந்து மாதவியுடன் காதல் என்று பரவிய செய்தி குறித்து பட தயாரிப்பாளரும், தொழில் அதிபருமான வருண் மணியன்  விளக்கம் அளித்துள்ளார்.
 
இதுபற்றி வருண் மணி கூறுகையில், நான் சில நண்பர்களுடன் கடந்த மாதம் மாலத்தீவிற்கு சென்றபோது எடுத்துக் கொண்ட  புகைப்படத்தை தான் அவர் வெளியிட்டார். நான் பிந்து மாதவியை காதலிக்கவும் இல்லை, அவரை திருமணம் செய்யப்  போவதும் இல்லை என்று வருண் தெரிவித்துள்ளார். நானும், பிந்து மாதவியும் நல்ல நண்பர்கள் அவ்வளவு தான் என கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :