1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran

நடிகர் வில் ஸ்மித் 10 ஆண்டுகள் தடை: ஆஸ்கர் அகாடமி நடவடிக்கை!

willsmith
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதிப்பதாக ஆஸ்கர் அகாடமி அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்கர் விருது விழா நடைபெற்றபோது தனது மனைவி குறித்து அவமரியாதையாக பேசியதாக தொகுப்பாளர் கிரிஸ் ராக் என்பவரை நடிகர் வில் ஸ்மித் மேடையில் பளார் என கன்னத்தில் அறைந்தார்
 
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும், அதன்பின் தனது செயலுக்கு வில்ஸ்மித் வருத்தம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா மற்றும் மற்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ள நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகடமி நடவடிக்கை எடுத்துள்ளது.
 
விழா மேடைக்கு சென்ற தொகுப்பாளரை தாக்கியதால் இந்த நடவடிக்கை என்றும் அகாடமி விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது