ரசிகர்களைத் திருப்திபடுத்தியதா விஸ்வாசம் ?

Last Updated: வெள்ளி, 11 ஜனவரி 2019 (15:42 IST)
அஜித் நடித்துள்ள விஸ்வாசம் நேற்று வெளியானதை அடுத்து படம் எப்படி இருக்கிறதென ஒரு பொதுவான ரசிகரின் பார்வையிலான மதிப்பீடு.

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. விஸ்வாசம் படத்தோடு பேட்டையும் ரிலிசானதால் தியேட்டர்களை பாதியாகப் பகிர்ந்து கொள்ளவேண்டிய சூழ்நிலை உருவானது. சன்பிக்சர்ஸின் நெருக்கடியால் அதிகத் தியேட்டர்களில் பேட்ட ரிலிஸ் ஆனாலும் சிறப்புக் காட்சிகள், முதல் நாள் காட்சிகள் என அஜித் ரசிகர்களின் ராஜ்ஜியம்தான் நேற்று முழுவதும்.

அஜித் – சிவா காம்போவின் மாஸ் படமாக இருக்கும் என எதிர்பார்த்துப் போனவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது விஸ்வாசம். குடும்ப செண்ட்டிமெண்ட் தூக்கலாக வைத்து ரசிகர்களை உருக வைக்க நினைத்த சிவாவும் அஜித்தும் அதில் ஓரளவு பெற்றிருக்கின்றனர். அதிலும் பின்பாதியில் அஜித்தும் அவரது மகளாக நடித்திருக்கும் அனிகாவுக்கும் இடையிலான பாசப் போராட்டம் ரசிகர்களைக் கட்டிப்போடும் அம்சமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் மாஸான ஒரு அஜித் படத்தை எதிர்பார்த்துப் போன அஜித் ரசிகர்களை விஸ்வாசம் ஏமாற்றி இருந்தாலும் பொதுவான சினிமா ரசிகர்கள் மற்றும் குடும்ப ஆடியன்ஸை ஈர்க்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், அஜித் ரசிகர்களின் அலப்பறையான இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு குடும்பம் குடும்பமாகப் பார்க்கும் படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மொத்தத்தில் அஜித் ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றம் அளித்தாலும் பெண்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களைக் கவரும் அம்சங்களைக் கொண்டிருப்பதால் விஸ்வாசம் பொங்கல் விருந்துதான்.


 இதில் மேலும் படிக்கவும் :