வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: புதன், 19 ஜூலை 2017 (12:52 IST)

செப்டம்பரைக் குறிவைக்கும் அமலா பால் படம்

அரவிந்த் சாமி ஜோடியாக அமலா பால் நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தை, செப்டம்பரில் வெளியிட முடிவு  செய்துள்ளனர். 

 
அரவிந்த் சாமி – அமலா பால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தின் ரீமேக் இது. மோகன்லால் வேடத்தில் அரவிந்த் சாமியும், நயன்தாரா வேடத்தில் அமலா பாலும் நடிக்கின்றனர். மலையாளத்தில் இயக்கிய சித்திக், தமிழிலும் இயக்குகிறார். ரமேஷ் கண்ணா, தமிழ் வசனங்களை  எழுதியுள்ளார்.
 
அரவிந்த் சாமி – அமலா பாலின் குழந்தைகளாக, ‘சேதுபதி’ படத்தில் விஜய் சேதுபதியின் மகனாக நடித்த ராகவ்வும், ‘தெறி’  படத்தில் விஜய்யின் மகளாக நடித்த மீனாவின் மகள் ‘நைனிகா’வும் நடித்துள்ளனர். இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்தப் படம்,  செப்டம்பர் மாதம் ரிலீஸை நோக்கி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.