ஆஸ்கர் விருதை வென்றிடுமா தோனி?

Sasikala| Last Modified வெள்ளி, 23 டிசம்பர் 2016 (10:13 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியை வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட எம்.எஸ்.தோனி தி அண்டோல்டு ஸ்டோரி திரைப்படம் ரூ.200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

 
கேப்டன் தோனியை வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட எம்.எஸ்.தோனி தி அண்டோல்டு ஸ்டோரி திரைப்படம் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியானது. சுஷாந்த் சிங் ரஜ்புட் டோணியாக நடித்திருந்தார். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா முழுவதும் வெளியான இப்படம் ஃபாக்ஸ் ஸ்டார் தயாரிப்பில், நீரஜ் பாண்டே இயக்கத்தில், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்து வெளியானது.
 
இந்தியா முழுவதும் மாஸ் ஹீரோ படத்துக்கு கிடைக்கும் வரவேற்பும் உற்சாகமும் இந்த படத்துக்கும் கிடைத்தது. முதல் வாரத்தில் ரூ. 100 கோடி வசூலை எட்டிய இந்த படம், உலகளவில் ரூ. 215 கோடியை வசூல் செய்து அசத்தியது. இவ்வளவு சாதனைகளை படைத்த இந்த படம் தற்போது ஆஸ்கர் விருதுக்கான 336 படங்கள் இடம் பெற்றுள்ள பட்டியலில் சேர்ந்துள்ளது. டோணி தவிர ஐஸ்வர்யா ராய் நடித்த சரப்ஜித் படமும் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :