வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2016 (17:52 IST)

தமிழில் ரீமேக் செய்யப்படும் மலையாள சப்தமஸ்ரீ தஸ்கரா

தமிழில் ரீமேக் செய்யப்படும் மலையாள சப்தமஸ்ரீ தஸ்கரா

மலையாள இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணனின் படங்களின் பெயர்களை அறியாமல் உச்சரித்தால் பல் பெயர்ந்துவிடும். அவரது முதல் படம், நார்த் 24 காதம். இரண்டாவது படம், சப்தமஸ்ரீ தஸ்கரா. மூன்றாவதாக இயக்கியது, லார்ட் லிவிங்ஸ்டோன் 7000 கண்டி.


 
 
அனிலின் அடுத்தப் படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என்ற அச்சம் கேரளாவில் நிலவுகிறது.
 
அவரது முதலிரண்டு படங்களை தாராளமாக தமிழில் ரீமேக் செய்யலாம். முதல் படத்தில் பகத் பாசிலைப் போல் நடிக்க தமிழில் ஆள் வேண்டும். இரண்டாவது படம் ஒரு திருட்டை மையப்படுத்திய க்ரைம் த்ரில்லர். யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்.
 
அந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். பிருத்விராஜ், நெடுமுடி வேணு, செம்பன் வினோத், ஆசிப் அலி, சுதீர் கரமனா, சனுஜா நடித்த இந்தப் படத்தில் சனுஜா நடித்த வேடத்தை தமிழில் சாந்தினி செய்கிறார்.
 
விரைவில் படம் குறித்து விரிவாக அறிவிக்க உள்ளனர்.