செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 3 அக்டோபர் 2020 (09:53 IST)

வர்மாவை இப்போது ஓடிடியில் ரிலீஸ் செய்வது ஏன்? அதுக்கும் விக்ரம்தான் காரணம்!

பாலா இயக்கிய வர்மா திரைப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி சிம்ப்ளி சவுத் என்ற ஓடிடி பிளாட்பார்மில் ரிலிஸ் ஆக உள்ளது.

இயக்குனர் பாலா தன் நண்பர் விக்ரம்முக்காக அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியை ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால் அந்த படம் விக்ரம்முக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் திருப்தி இல்லாததால் அந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என முடிவெடுத்தனர். மேலும் புதிதாக படம் பிடிப்பது என்றும் அதற்காக ஆகும் செலவை தானே ஏற்றுக்கொள்வதாகவும் விக்ரம் தயாரிப்பாளருக்கு உறுதி அளித்திருந்தார்.

இதனையடுத்து அந்த படம் மீண்டும் அர்ஜுன் ரெட்டி இயக்குனரின் உதவி இயக்குனர் கிரிசய்யா என்பவரின் இயக்கத்தில் ஆதித்யா வர்மா என்ற டைட்டிலில் உருவாகி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிலீசானது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் பாலா இயக்கிய ’வர்மா’ திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸ் ஆகப் போவதாக சமீப காலமாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அக்டோபர் 6ஆம் தேதி இந்தப் படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது வர்மா ரிலிஸ் செய்யப்படுவதற்கு முக்கியமானக் காரணம் விக்ரம்தானாம். தயாரிப்பாளருக்கு தருவதாக சொன்ன பணத்தை விக்ரம் தராததால் இந்த படத்தை ஓடிடி க்கு கொடுத்தாலாவது ஒரு தொகை கிடைக்குமே என்ற ஆசையில்தான் இப்போது அதை ரிலிஸ் செய்கிறார்களாம்.