1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 12 ஜூலை 2023 (21:40 IST)

விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சந்திப்பு ஏன்? புஸ்ஸி ஆனந்த் விளக்கம்

நடிகர் விஜய் இன்று 2 வது நாளாக மக்கள் இயக்க  நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடத்தியது  பற்றி  ‘’மக்கள் இயக்கத்தின்  செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை, பனையூரில் இன்று மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் 2 வது  நாளாக சந்தித்த நிலையில், ஆலோசனை கூட்டம் முடிந்த பின் புறப்பட்டுச் சென்றார்.

அதன்பின்னர்,  இன்று நடைபெற்ற மக்கள் இயக்க  நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் பற்றி விஜய் ‘’மக்கள் இயக்கத்தின்  செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''நேற்றும் இன்றும் நடைபெற்ற கூட்டத்தில், கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்ற கல்வி விழாவிற்கு எல்லோருக்கும், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், நகரம்,  ஒன்றியம் கிளைமன்ற நிர்வாகிகள் அனைவர் அனைவரும்  மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோரை பத்திரமாக அழைத்துவந்து, அதேபோல் அவர்களை  வீட்டில் விட்டனர்.

அதன் காரணமாக்  நேற்றும்  இன்றும் எல்லோரையும் அழைத்து அவர்களுக்கு மதிய விருந்து கொடுத்தார். ஒவ்வொருத்தரையும் சந்தித்து நன்றி கூறியதுடன் அவர்களின் குடும்பத்தைப் பற்றி தளபதி  விசாரித்தார்.

இது எப்போதும் நடைபெறுவதுதான்.''  என்று தெரிவித்தார்.