வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (08:55 IST)

இந்த ஒரே ஒரு பயம்தான், சூர்யா ஓடிடி முடிவை எடுக்க காரணம்: பரபரப்பு தகவல்

நடிகர் சூர்யா தான் நடித்து தயாரித்த ’சூரரைப்போற்று’ என்ற திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்தார் என்பது தெரிந்ததே. அவரது இந்த முடிவுக்கு விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தாலும் திரையுலக நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் சூர்யாவுக்கு உண்மையில் ஓடிடியில் ரிலீஸ் செய்ய முழு விருப்பமில்லை என்றும் ஆனால் ஒரே ஒரு பயம் காரணமாகத் தான் அவர் ஓடிடி ரிலீஸ் செய்யும் முடிவுக்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
உண்மையில் சூரரைப்போற்று திரைப்படத்தை திரையரங்குகளில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என சூர்யா விரும்பி, அதற்காக அவர் சென்சார் அப்ளை செய்து சென்சார் சான்றிதழ் வாங்கினார், ஆனால் சமீபத்தில் சூர்யா தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சூரரைப்போற்று திரைப்படத்தை பார்த்தார் 
 
அப்போது அவருக்கு நெருக்கமான நண்பர்கள் இந்த படம் குறித்து கூறிய போது ’படம் சூப்பராக உள்ளது ஆனால் அதே நேரத்தில் இந்த படம் பி மற்றும் சி செண்ட்டர் ஆடியன்ஸ்களுக்கு புரியாது என்றும் ஏ செண்டர்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் கூறியதாக தெரிகிறது 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த சூர்யா ஏற்கனவே தொடர் தோல்விகளை பெற்று வரும் நிலையில் இந்த படமும் தோல்வி அடைந்தால் தனது மார்க்கெட்டுக்கு சிக்கல் என்று ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது 
 
அதே நேரத்தில் ஓடிடி நிறுவனமும் நல்ல தொகை கொடுக்க முன்வந்ததால் இந்த படத்தை அவர் ஓடிடி ரிலீஸ் செய்ய ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது