1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (17:42 IST)

சூர்யா சூப்பர் ஸ்டார் ஆனது எப்படி… அமேசான் செய்த குழப்பம்!

நடிகர் சூர்யா நடிப்பில் இப்போது ஜெய் பீம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ள நிலையில் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படம் முழுவதுமாய் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் முன்னதாகவே அமேசான் ப்ரைம் ஓடிடிக்கு விற்கப்பட்டது.

இதனால் இந்த படம் அமேசானில் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்னர் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படம் சம்மந்தமாக சூர்யாவின் 2டி நிறுவனம் ஒரு பத்திரிக்கை குறிப்பை அனுப்பியபோது அதில் ’சூப்பர் ஸ்டார் சூர்யா நடிக்கும்’ எனப் போட்டு அனுப்பியுள்ளார்களாம்.

இது சர்ச்சைகளைக் கிளப்ப இப்போது அதற்கு சூர்யா தரப்பு விளக்கம் அளித்துள்ளது. ஜெய் பீம் படத்தின் இணைத் தயாரிப்பாளர் எங்கள் அனுமதியின்றி தவறுதலாக அமேசான் நிறுவனம் சூப்பர் ஸ்டார் எனப் போட்டு ப்ரஸ் ரிலீஸ் செய்துவிட்டது என விளக்கம் அளித்துள்ளாராம்.