சத்யராஜ் சின்ன நடிகரா?: காரணம் இருக்கு!

சத்யராஜ் சின்ன நடிகரா?: காரணம் இருக்கு!


Caston| Last Modified வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (16:24 IST)
9 வருடங்களுக்கு முன்னர் காவிரி விவகாரத்தில் நடிகர் சத்யராஜ் கன்னடர்களுக்கு எதிராக பேசியதால் அவர் நடித்துள்ள படத்தை கன்னட அமைப்புகள் தற்போது எதிர்கின்றன. சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் தான் பாகுபலி 2 படத்தை வெளியிட அனுமதிப்போம் என கன்னட அமைப்புகள் எச்சரிக்கின்றன.

 
 
இந்நிலையில் நடிகர் சத்யராஜ் இன்று தனது வருத்தத்தை நீண்ட விளக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறினார். அதில் தன்னை ஒரு சின்ன நடிகர் என குறிப்பிட்டு, இனியும் தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் இப்படி குரல் கொடுக்கத்தான் செய்வேன்.
 
எனவே இந்த சின்ன நடிகரால் உங்களின் பெரிய படங்களுக்கு பிரச்சனை வருமென பயந்தால் என்னை நடிக்க கூப்பிடாதீர்கள் என்றார். சத்யராஜ் தன்னை திரும்ப திரும்ப சின்ன நடிகர் என குறிப்பிட்டதற்கு காரணம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இன்று காலை கன்னட மக்களிடம் பேசிய பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமௌலி நடிகர் சத்யராஜை சின்ன நடிகர் என குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. சத்யராஜ் ஒரு சின்ன நடிகர், சின்ன ரோல் பண்ணியிருக்கிறார். அதுக்காக படத்தை எதிர்க்காதீங்க என ராஜமௌலி கூறியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ராஜமௌலியிடம் தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தவே சத்யராஜ் தன்னை சின்ன நடிகர் என கூறியதாக தகவல்கள் வருகின்றன.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :