கமல் எனக்கு இதனாலதான் செட் ஆகலை: பி.வாசு


sivalingam| Last Modified புதன், 2 ஆகஸ்ட் 2017 (22:15 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராசியான இயக்குனர் என்ற பெயர் எடுத்தவர் பி.வாசு. பணக்காரன்', 'மன்னன்', 'உழைப்பாளி', 'சந்திரமுகி  என்ற நான்கு சூப்பர் ஹிட் வெற்றி படங்களை இயக்கியவர். அதுமட்டுமின்றி சத்யரஜூக்கு ஒரு 'வால்டர் வெற்றிவேல்'. பிரபுவுக்கு ஒரு சின்னத்தம்பி என ஒவ்வொரு பிரபல நடிகருக்கும் மெகா ஹிட் படத்தை இயக்கி கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


 
 
இவரது இயக்கத்தில் நடிக்காத பெரிய இயக்குனர் என்று பார்த்தால் அது கமல்ஹாசனும், விஜய்யும்தான். விஜய்யை இயக்க வாசுவுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை, ஆனால் கமல்ஹாசன் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தும் அதை அவர் நழுவ விட்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
 
மூன்று வேடங்கள் கொண்ட ஒரு கதையை பி.வாசு கமலிடம் கூறியதாகவும், கமலுக்கும் கதை பிடித்து நடிக்க ஒப்புக்கொண்டாராம். ஆனால் அந்த நேரத்தில் கே.எஸ்.ரவிகுமார் பத்து வேடங்கள் கொண்ட ஒரு கதையை கூறியதால் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட கமல், வாசுவிடம் நான் இப்போது பத்து வேடத்தில் நடித்து கொண்டிருப்பதால் அடுத்து 3 வேடங்கள் கொண்ட படம் உடனே நடிக்க முடியாது என்றும் அதனால் கொஞ்சம் கேப் விட்டு வாருங்கள் என்றும் கூறி அனுப்பிவிட்டாராம். ஆனால் வாசு கேப் விட்டு கமலை தொடர்பு கொள்ளாததால் அவரை இயக்கும் வாய்ப்பு கிட்டாமலேயே போய்விட்டதாக பி.வாசு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :