''ராயன்''படத்தில் ஒவ்வொரு நடிகருக்கும் தனி போஸ்டர் ஏன்?
தனுஷின் 50வது படம் ராயன். இப்படத்தை தனுஷ் இயக்கி நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் இணைந்த நிலையில், வரலட்சுமி சரத்குமார் இப்படத்தில் இணைந்தார்.
இப்படத்தில் இணைந்துள்ள நடிகர்களுக்கு தனித்தனியே போஸ்டர் வெளியிட்டு கவுரப்படுத்தி வருகிறார் தனுஷ்.
இப்படி ஏன் ஒவ்வொரு நடிகருக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றால்?... இப்படத்தில் ஒவ்வொரு கேரக்டருக்கும் கொடுக்கும் வகையில் கதையை அமைத்து, அதற்கேற்படி நடிகர்களை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அதனால் ஒவ்வொரு க கேரக்டரில் நடிக்கும் நடிகரையும் கவுரவிக்கும் வகையில் தனுஷ் இப்படி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
குறிப்பாக துஷாரா விஜயனுக்கு என தனித்துவமான தைரியமான கேரக்டராக தனுஷ் வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இனியும் இப்படத்தில் நடிக்கவுள்ள சில நடிகர்களையும் தனுஷ் அறிமுகப்படுத்துவார் என தெரிகிறது.