திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (11:55 IST)

அத்ராங்கி டே ஓடிடி ரிலீஸ் … இப்போ மட்டும் மௌனம் ஏன் தனுஷ்?

தனுஷ் மற்றும் அக்‌ஷய்குமார் நடித்துள்ள அத்ராங்கி டே திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

ராஞ்சனா என்ற படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  அதன் பின்னர் அவர் ஷமிதாப் என்ற படத்தில் அமிதாப்புடன் இணைந்து நடித்தார். அந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து பாலிவுட்டுக்கு ஒரு இடைவெளி விட்டார் தனுஷ். இந்நிலையில் சில வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் பாலிவுட் படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார் தனுஷ்.

இந்த படத்தை அவரது முதல் படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்கி உள்ளார். இந்த படத்தில்  தனுஷுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் நடித்துள்ளனர். இந்த படம் முடிந்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இப்போது ஓடிடியில் வெளியிட பரிசீலித்து வருவதாக அக்‌ஷய்குமார் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் ரிலிஸ் பற்றி எதுவும் பேசாத தனுஷ், ஏற்கனவே தன்னுடைய ஜகமே தந்திரம் ரிலிஸ் ஓடிடியில் வெளியான போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அந்த படத்தின் தயாரிப்பாளரோடும் மனக்கசப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.