எனக்கு நடிக்க தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆர்த்தி


sivalingam| Last Modified ஞாயிறு, 16 ஜூலை 2017 (22:28 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து இன்று ஆர்த்தி வெளியேற்றப்பட்டார். 


 
 
ஓவியா, ஆர்த்தி, ஜூலி மற்றும் வையாபுரி ஆகிய நால்வரில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார் என்று கூறப்பட்டிருந்த நிலையில் நேற்று ஓவியா வெளியேற்றப்படமாட்டார் என்பது உறுதியானது.
 
இந்த நிலையில் வையாபுரிக்கும் அதிக வாக்குகள் கிடைத்திருந்ததால் வெளியேறுவது ஜூலியா, ஆர்த்தியா என்ற கேள்வி எழுந்தது. இருவரும் வெளியே கிளம்ப பெட்டியை தயார் நிலையில் வைத்திருந்த நிலையில் ஆர்த்தி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.
 
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஆர்த்தி, 'பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் போல் தான் நடிக்கவில்லை என்றும், தனக்கு நடிக்க தெரியாததால் மக்களின் வாக்குகள் தனக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கமலிடம் கூறினார். ஆனால் டுவிட்டரில் ஆர்த்தி வெளியேற்றப்பட்டதற்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :