கைத்தறி விற்பனை தூதரானார் சமந்தா

Sasikala| Last Modified வியாழன், 2 பிப்ரவரி 2017 (14:28 IST)
தெலுங்கானா மாநிலத்தின் அரசு கைத்தறி விற்பனை தூதராக நடிகை சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை  அம்மாநில அமைச்சர் தாரங்கராமராவ் அறிவித்தார்.

 
சமீபத்தில் சமந்தாவும் தாரங்கராமராவும் சந்தித்தனர். அப்போது கைத்தறி விற்பனைக்கு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு  சமந்தா பாராட்டு தெரிவித்திருக்கிறார். அதில் மகிழ்ந்துபோன தாரங்கராமராவ், சமந்தாவை தெலுங்கானா கைத்தறி விற்பனை  தூதராக நியமிப்பதாக அறிவித்தார்.
 
தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகரராவின் மகன் இந்த தாரங்காராமராவ் என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :