1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வியாழன், 21 ஜூன் 2018 (16:13 IST)

தீபாவளிக்கு ரிலீஸாகிறதா விஷாலின் ‘சண்டக்கோழி 2’?

விஷால் நடித்துள்ள ‘சண்டக்கோழி 2’ படம், தீபாவளிக்கு ரிலீஸாகலாம் என்கிறார்கள்.
 
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘சண்டக்கோழி 2’. ஏற்கெனவே ரிலீஸான ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராகியுள்ளது. விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண், அர்ஜெய், கஞ்சா கருப்பு, ராம்தாஸ், ஹரிஷ் பெராடி, மீரா ஜாஸ்மின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல். எடிட் செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். ஆக்‌ஷன் டிராமாவாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது.
 
விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் இந்தப் படம் ரிலீஸாகும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில்தான் விஷால் நடிப்பில் ‘இரும்புத்திரை’ரிலீஸானது. அடுத்தடுத்து தன்னுடைய படங்களை ரிலீஸ் செய்தால் பஞ்சாயத்து ஆகிவிடும் என்பதால், தீபாவளி விடுமுறைக்கு ரிலீஸ் செய்யலாம் என்று யோசித்து வருகிறாராம் விஷால்.