ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (16:04 IST)

“டிமான்ட்டி காலனி 2” ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? வெளியானது அறிவிப்பு..!!

Demonte Colony
'டிமான்ட்டி காலனி 2’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்  தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015-ம் ஆண்டு  வெளியான படம் டிமான்டி காலனி. ஹாரர் த்ரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அருள்நிதியுடன் பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் வாரத்தில் 275 திரையரங்குகளில் வெளியான டிமான்டி காலனி, பின்னர் 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

டிமான்டி காலனி படத்திற்கான ஓடிடி உரிமையை ஜி5(zee5) நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்தது. இந்த நிலையில் 'டிமான்டி காலனி 2' செப்டம்பர் 27ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என ஜி5 நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.