அடுத்த சூப்பர் ஸ்டார் எஸ்.ஜே.சூர்யாவா...?

Sasikala| Last Modified வியாழன், 9 மார்ச் 2017 (17:47 IST)
அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது. சிம்பு தன்னை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ஒரு  காலத்தில் முன் வைத்தார். பட்டங்களால் எதுவும் ஆகப் போவதில்லை என்று தெளிந்தபின் சூப்பர் ஸ்டார் குறித்து பேசுவதில்லை.

 
ரசிகர்கள் தங்கள் ஆதர்ச நடிகரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதும், ரஜினி ரசிகர்கள் உலக்தில் ஒரே சூரியன், ஒரே  சந்திரன், ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி என்று பதிவிடுவதும் வாடிக்கை. இந்த நாட்டு நிலவரம் தெரியாமல், அடுத்த சூப்பர் ஸ்டார் என்று எஸ்.ஜே.சூர்யாவை சொல்லப்போய் நெட்டிசன்கள் செல்வராகவனை ஓட்டி வருகிறார்கள்.
 
மார்ச் 5 செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் எஸ்.ஜே.சூர்யா. அதற்கு நன்றி தெரிவித்த  செல்வராகவன் அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
 
ரஜினி ரசிகர்கள் எப்படி அவரை குதறியிருப்பார்கள் என்று சொல்லாமலே உங்களுக்கு விளங்கியிருக்குமே.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :