மிஸ்டர் கெளதம் மேனன்… உங்கள் பிளான் தான் என்ன?


cauveri manickam| Last Modified வெள்ளி, 28 ஜூலை 2017 (12:50 IST)
கையில் உள்ள படங்களையே முடிக்க முடியாத நிலையில், புதிதாக இரண்டு படங்களைத் தயாரிக்கிறார் கெளதம் மேனன்.
 

 

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, விக்ரம் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம்’ என இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் தயாராகி வருகின்றன. இந்த இரண்டு படங்களுமே அவருடைய சொந்தத் தயாரிப்பு. அதுமட்டுமின்றி, செல்வராகவன் இயக்கியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தையும்தான் அவர்தான் தயாரித்துள்ளார். இந்தப் படம் ரிலீஸுக்குத் தயாராகி பல மாதங்கள் ஆகியும், பைனான்ஸ் பிரச்னையால் இன்னும் ரிலீஸ் செய்ய முடியாமல் காத்துக் கிடக்கிறது.

இன்னொரு பக்கம், அவர் இயக்கும் இரண்டு படங்களுமே பைனான்ஸ் பிரச்னையால் ஆமை போல மெதுவாகத்தான் நகர்ந்து வருகின்றன. இந்தப் படங்களை முதலில் முடித்து ரிலீஸ் செய்யாமல், புதிதாக இரண்டு படங்களைத் தயாரிக்கிறார் கெளதம் மேனன்.  ஒன்று, ‘துருவங்கள் 16’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேனின் அடுத்த படமான ‘நரகாசூரன்’. அரவிந்த் சாமி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை, கார்த்திக் நரேனுடன் இணைந்து தயாரிக்கிறார் கெளதம் மேனன். இரண்டாவது, விஷ்ணு விஷால், தமன்னா நடிக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’. தெலுங்கில் வெளியான ‘பெல்லி சூப்புலு’ படத்தின் ரீமேக் இது. ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தை எத்தனை மாதங்களுக்கு இழுக்கப் போகிறார்களோ..?


 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :