1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வியாழன், 20 ஜூலை 2017 (13:54 IST)

ஜூலிக்கு என்ன ஆச்சு?: கண்கள் மேலே சொருக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு! (வீடியோ இணைப்பு)

ஜூலிக்கு என்ன ஆச்சு?: கண்கள் மேலே சொருக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு! (வீடியோ இணைப்பு)

நடிகர் கமல்ஹாசன் விஜய் தொலைகாட்சியில் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகச்சி தொடங்கியதில் இருந்து பரபரப்புக்கும், சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லாமல் தொடர்ந்து நடந்து வருகிறது.


 
 
இந்நிகழ்ச்சியில் சினிமாத்துறையை சேராத ஒரே நபராக கலந்து கொண்டவர் ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி. இவர் பிக் பாஸ் வீட்டில் நுழைந்தது முதல் இவரே சுற்றியே நிகழ்ச்சி நடந்து வருகிறது, சக போட்டியாளர்கள் இவர் மீது வெறுப்பு காட்டுவதும். இவரது செயல்கள் அனைத்தையும் பொய் என அவர்கள் கூறுவதும் தொடர்ந்து நடந்து தான் வருகிறது.
 
இந்நிலையில் இன்று வெளியான புரோமோ வீடியோவில் நடிகை நமீதா ஜூலியை சீண்டுவது போல காட்சிகள் உள்ளன. இந்நிலையில் ஜூலியை சினேகன் உணவு உண்ணும் இடத்துக்கு அழைத்து வந்து அங்கு பேச ஆரம்பித்ததும் ஜூலி தனது வயிற்றை பிடித்துக்கொண்டு கதறி அழ ஆரம்பிக்கிறார்.

 

 
 
ஜூலியின் கதறலை கேட்டதும் சக போட்டியாளர்கள் அனைவரும் பதற்றமடைந்து ஜூலிக்கு என்ன ஆச்சு என அதிர்ச்சியடைகின்றனர். ஆனால் காயத்ரி ரகுராம் இவளுக்கு இதுவே வேலையா போச்சு, சும்மா டிராமா போடுவது என மனிதாபிமானம் இல்லாமல் பேசுகிறார்.
 
இதனையடுத்து சினேகன் ஜூலியை அப்படியே தூக்கி ஷோபாவில் படுக்க வைக்கிறார். ஆனால் ஜூலிக்கு வலிப்பு வந்தது போல கை, கால்கள் இழுக்கின்றன. மேலும் அவரது கண்களும் மேலே சொருகுவது போல அந்த புரோமோ வீடியோவில் காட்டப்படுகிறது. இதனையடுத்து ஜூலிக்கு என்ன ஆச்சு என்ற பரபரப்பு எகிறியுள்ளது.