ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 20 நவம்பர் 2018 (12:30 IST)

'காற்றின் மொழி' பார்ப்பதன் மூலம் கஜா புயலால் பாதித்தவர்களுக்கு உதவலாம்!

கஜா புயல் தாக்கியதால் தமிழகத்தில் 46 பேர் உயிரிழந்தனர். டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கானார் வாழ்வாரத்தை இழந்து, தவித்து வருகிறார்கள். இவர்களுக்கு பல்வேறு தன்னார்வலர்கள் உதவி செய்து வருகிறார்கள.
 
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் காற்றின் மொழி. இந்த படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில் காற்றின் மொழி  படக்குழு கஜா புயல் பாதித்தவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காற்றின் மொழி பட தயாரிப்பாளர் தனஞ்செயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "காற்றின் மொழி திரைப்படத்தை ஒரு சிறந்த குடும்ப படமாக கொண்டாடி வரும் தமிழக மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

இந்த சமயத்தில் கஜா புயலால பாதிக்கப்பட்ட தமிழக டெல்டா பகுதி மக்களுக்கு நீங்கள் காற்றின் மொழி திரைப்படம் பார்ப்பதன் மூலமும் உதவலாம். இன்று முதல் தமிழகமெங்கும் விற்பனையாகும் ஒவ்வொரு காற்றின் மொழி டிக்கெட் வருமானத்தின் தயாரிப்பாளர் ஷேரிலிருந்து ரூபாய் 2 தமிழக அரசின் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.

நம்மால் முடிந்த அளவு நாம் எல்லோருக்கும் நிதி அளித்து பாதிக்கப்பட்டட மக்களுக்கு உதவுவோம்" இவ்வாறு கூறியுள்ளார்.