1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 30 ஜூலை 2021 (11:52 IST)

சொந்த வாழ்வில் தோல்வி... சினிமாவில் படிப்படியாக உயர்ந்த விஜே ரம்யா!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது. ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
 
2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார். சொந்த வாழ்க்கை சோகத்தில் முடிந்தாலும் அதை எண்ணி வருத்தப்படாமல் சினிமாத்துறையில் தான் கனவு கண்ட இடத்தை அடைந்து வரும் ரம்யா இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.