புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (12:34 IST)

நான் எல்கேஜி, யூகேஜி படிச்ச ஸ்கூல் இதுதான்: விஜே மணிமேகலை வெளியிட்ட புகைப்படம் வைரல்

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருக்கும் நிலையில் சினிமா பிரபலங்கள் பலர் தங்களுடைய சமூக வலைதளங்களில் வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களாக பிரபல விஜே மணிமேகலை தனது சொந்த கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களுடன் பழகி, சில வித்தியாசமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார். அவருடைய புகைப்படங்கள், வீடியோக்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது KHMS என்ற கதிரவன் என்ற பெயர் கொண்ட பள்ளியின் முன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்ட மணிமேகலை, ‘இதுதான் நான் எல்.கே.ஜி, யூ.கே.ஜி படித்த பள்ளியின் பெயர் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
நான் எல்கேஜி யுகேஜி மற்றும் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படித்த ஸ்கூல் இதுதான். இந்த புகைப்படம் மூன்று வாரங்களுக்கு முன் எடுக்கபட்டது. கதிரவன் பள்ளி என்ற இந்த பள்ளியில் தான் படித்தேன். நான் எல்லாம் பத்தாம் வகுப்பு படிக்கிற வரைக்கும் ஸ்கூலுக்கு போகும் போது அழுதுகிட்டே தான் போவேன். படிக்கவே பிடிக்காது. ஆனால் இப்போது ஸ்கூல் பக்கம் போகும்போது ஜாலியாக இருக்கு என்று கூறியுள்ளார்
 
இதனை அடுத்து அதே பள்ளியில் படித்த ஒரு சிலர் ’நீங்களும் கதிரவன் புரோடக்ட் தானா’ என்று கமெண்ட் அடித்துள்ளனர்