1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 மே 2020 (09:03 IST)

முறுக்கு அடுப்பில் முறுக்கு சுட்ட மணிமேகலை: புதிய பிசினஸ் ஆரம்பம்

முறுக்கு அடுப்பில் முறுக்கு சுட்ட மணிமேகலை
இந்த லாக்டோன் நேரத்தில் சொந்த கிராமத்துக்குச் சென்றுள்ள பிரபல விஜே மணிமேகலை அங்கு கிராமத்தினர்களுடன் கலந்து கொண்ட விளையாட்டு, வேடிக்கைகள் உள்பட பல விதமான வீடியோக்களை அவ்வப்போது அவர் பதிவு செய்து வருகிறார் 
 
இந்த நிலையில் சமீபத்தில் விஜே மணிமேகலை முறுக்கு அடுப்பு செய்த வீடியோவை பதிவு செய்தார். இதனை அடுத்து தற்போது அவர் முறுக்கு சுட்டு வியாபாரம் செய்யும் தொழிலையும் ஆரம்பித்து விட்டதாக அவர் தனது வீடியோவில் கூறியுள்ளார் 
 
கிராமங்களில் முறுக்கு அடுப்பு என்பது மிகவும் புகழ்பெற்றது. அங்கு உள்ள ஹோட்டல்களில் எல்லாம் முறுக்கு அடுப்புதான் இருக்கும். அந்த முறுக்கு அடுப்பை சமீபத்தில் மண் குழைத்து தானே செய்த வீடியோவை சமீபத்தில் வெளியிட்ட மணிமேகலை, அதன் பின்னர் அந்த அடுப்பின்மூலம் முறுக்கு சுட்டு, முறுக்கு ஃபேக்டரி ஓபன் செய்யும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார் 
 
ஆல் வேர்ல்ட் முறுக்கு பிரைவேட் லிமிடெட் கம்பெனி என்று அந்த கம்பெனிக்கு பெயர் வைத்துள்ள மணிமேகலை, முறுக்கு பேக்ட்ரியை அவரே ரிப்பன் வெட்டி ஓபன் செய்வது போல அந்த வீடியோவில் உள்ளது. மேலும் பின்னணியில் சரத்குமார் நடித்த ’சூரிய வம்சம்’ படத்தில் ஒரே பாட்டில் பணக்காரரான பாடலும் ’படையப்பா’ படத்தில் ஒரே பாட்டில் கோடீஸ்வரரான பாடலும் ஒலிக்கிறது
 
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது முறுக்கு சுடக் கற்றுக் கொண்டு விட்டதாகவும் தனக்கு இப்போது ஒரு தொழில் தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ள இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது