ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (14:41 IST)

ஆத்தி.... என்னமா ரப்பர் மாதிரி வலைக்குற - வைரலாகும் கிகியின் யோகா வீடியோ!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் கீர்த்தி. இவர்  நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கீர்த்தி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதற்கிடையில் டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார். திருமணம் ஆன பிறகும் கேரியரில் தான் நினைப்பதை தொடர்ந்து சாதித்து வரும் கீர்த்தி அவ்வப்போது யோகாசனம் செய்யும் புகைப்படங்களை சமூவலைத்தளங்களில் வெளியிட்டு அனைவரையும் வியக்க செய்திடுவார்.

அந்தவகையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் உடம்பை ரப்பர் போன்று வளைத்து நெளித்து யோகா யோகா செய்த வீடியோவை வெளியிட்டு அனைவரையும் சிலிர்க்க வைத்துவிட்டார். இதோ அந்த வீடியோ....