திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (15:55 IST)

உனக்கு இவ்ளோவ் தைரியமா? வியக்க வைத்த விஜய் டிவி ஜாக்குலின்!

தமிழ் தொலைக்காட்சிகளிலேயே புது புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தமிழக சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பத்து விஜய் தொலைக்காட்சி. பல திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுத்து பிரபல படுத்திய பெருமை விஜய் டிவியையே சேரும். 
 
அப்படி தான் தன் வெகுளியான பேச்சு திறமையை வைத்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை துவங்கி குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து அனைவருக்கும் பிடித்த பேவரைட் விஜே வாக மாறினார் ஜாக்குலின்.
 
இவர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும் போதே படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து சிறு சிறு கதாபாத்திரங்ககளில் நடித்து வந்த ஜாக்குலினுக்கு சீரியல்களிலும் நடிக்கிறார். 
இந்நிலையில் தற்போது சாதுவான புலிகளுக்கு பெயர் பெற்ற தாய்லாந்திற்கு ட்ரிப் நடித்துள்ள ஜாக்குலின் அங்கு புலியுடன் செல்லமாய் போஸ் கொடுத்த போட்டோ வெளியிட்டு இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.