1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (15:36 IST)

விவேக்கிற்கு சைமா விருது - மகள் நெகிழ்ச்சி!

தாராள பிரபு படத்திற்காக சிறந்த காமெடி நடிகருக்கான சைமா விருது மறைந்த நடிகர் விவேக்கிற்கு கிடைத்துள்ளது. 

 
தமிழ் நகைச்சுவை நடிகரான விவேக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நல குறைவால் காலமானார். இந்நிலையில் இவருக்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான தாராள பிரபு படத்திற்காக சிறந்த காமெடி நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. 
 
இது குறித்து விவேக்கின் மகள் ட்விட்டர் பக்கத்தில், எனது அப்பாவிற்கு தாராள பிரபு படத்திற்காக விருது கொடுத்ததற்கு நன்றி. அதனைப் பெற்று எங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்ந்த யோகி பாபு அண்ணாவுக்கு நன்றி. ரசிகர்களுக்கும் நன்றி என கூறிப்பிட்டுள்ளார்.