வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 6 ஜூலை 2017 (06:35 IST)

வேற லெவலில் விவேகம்: வெளிநாட்டு விநியோகிஸ்தர்கள் பாராட்டு

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டு விநியோகிஸ்தர்களுக்காக 'விவேகம்' படத்தின் ஒருசில ஆக்சன் காட்சிகள் மற்றும் ஒரு பாடல் காட்சிகள் திரையிடப்பட்டதாம்



 
 
இந்த காட்சிகளை பார்த்த விநியோகிஸ்தர்கள் படம் வேற லெவலை இருப்பதை அறிந்து இதன் ரிலீஸ் உரிமையை பெற போட்டி போடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இதற்கு முன் இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் இந்த படத்தின் வியாபாரம் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும், இந்த படம் வசூலில் சாதனை செய்யும் என்றும் கூறப்படுகிறது. 
 
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமாக தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக்  ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.