வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 23 ஆகஸ்ட் 2017 (22:09 IST)

ரூ.1500 வரை 'விவேகம்' டிக்கெட்: அஜித் குரல் கொடுப்பாரா?

விவேகம் படத்தின் நாளைய அதிகாலை காட்சி டிக்கெட்டுக்கள் ரூ.800 முதல் ரூ.1500 வரை விற்கப்படுவதாகவும், இந்த விற்பனையை அஜித் ரசிகர்கள் என்ற போர்வையில் சில சமூக  விரோதிகள் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.



 
 
உண்மையான அஜித் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை என்ன விலை கொடுத்தேனும் கொடுத்து பார்க்க வேண்டும் என்ற வெறியுடன் இருப்பதால், இந்த ஆர்வத்தை புரிந்து கொண்டு அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
 
அஜித் இதற்கு முன்னர் வேறு எதற்குமே குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, ரசிகர்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை கள்ள மார்க்கெட்டில் உள்ளவர்கள் சம்பாதிப்பதை எதிர்த்தாவது குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அஜித் குரல் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்