ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (19:38 IST)

வசூலில் வேகம் குறைந்த விவேகம்

விவேகம் திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் வசூல் சாதனை படைத்துள்ளது என்ற மாய பிம்பம் உடைந்துள்ளது.


 

 
விவேகம் திரைப்படம் வெளியாகி பாகுபலி, கபாலி ஆகிய படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது என தகவல்கள் தீயாக பரவி வருகிறது. இந்நிலையில் விவேகம் படத்தின் வசூல் குறித்த உணமை நிலவரம் வெளியாகியுள்ளது. நான்கு நாட்கள் முடித்து ஐந்து நாளில் வசூல் பாதியாக குறைந்துவிட்டதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
 
கடந்த ஐந்து நாட்களில் விவேகம் திரைப்படம் 6.23 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் விவேகம் படம் 150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்ற பொய்யான செய்தி பரப்பப்படுகிறது.