1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (12:28 IST)

விரைவில் வெளியாகிறதா ‘விவேகம்’ டீஸர்?

அஜித் நடித்துவரும் ‘விவேகம்’ படத்தின் டீஸர், விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
 

 

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘விவேகம்’. காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.

சிக்ஸ் பேக்குடன் அஜித் நிற்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், அடுத்து வெளியான கட்டுமஸ்தான அஜித் புகைப்படத்தையும் பார்த்து, அடுத்த வெளியீட்டிற்காகக் காத்திருக்கின்றனர் ரசிகர்கள். அடுத்த வெளியீடு என்னவாக இருக்கும்? டீஸர்தான் அடுத்து வெளிவரும் என்பது எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்நிலையில், படத்தின் எடிட்டரான ரூபன், பல்கேரியாவுக்குச் சென்றுள்ளார். வேலை விஷயமாக அங்கு சென்றிருப்பதாக அவரே குறிப்பிட்டுள்ளார். படத்தின் தயாரிப்பாளரான சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜனும் அங்குதான் இருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது, பல்கேரியாவில் இருந்தே டீஸரை கட் பண்ணி, ரிலீஸ் பண்ணுவார்கள் என்று தெரிகிறது. இன்னும் இரண்டு வாரங்களில் அஜித்தின் பிறந்தநாளுக்கு டீஸர் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.