Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விவேகம்' படத்திற்கு 'யூ' சான்றிதழா? 'யூஏ' சான்றிதழா?


sivalingam| Last Modified திங்கள், 31 ஜூலை 2017 (22:10 IST)
அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்தனர். இன்று மதியம் சென்சார் அதிகாரிகள் பார்த்து கொண்டிருக்கும்போதே இந்த படம் 'யூ' சர்டிபிகேட் பெற்றுவிட்டதாக ஆர்வ கோளாறில் சிலர் செய்திகளை டுவிட்டரில் வெளியிட்டனர்.


 
 
மேலும் படம் பார்த்து முடித்து சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு என்ன சான்றிதழ் தரலாம் என்று ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். 'யூ' அல்லது 'யூஏ' சான்றிதழ் என இரண்டில் ஒன்றில் எதை கொடுக்கலாம் என்று ஆலோசித்து கொண்டிருந்தபோதும் சில முக்கிய செய்தி நிறுவனங்களே இந்த படம் 'யூ' சான்றிதழ் பெற்றுவிட்டதாக அதிகாரபூர்வ செய்தியினை வெளியிட்டது.
 
ஆனால் கடைசியில் 'விவேகம்' படத்திற்கு கொடுக்கப்பட்டது 'யூஏ' சான்றிதழ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக வன்முறை மற்றும் சண்டைக்காட்சிகள் இருப்பதால் இந்த சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் விவேகம் படம் சென்சார் சான்றிதழ் பெற்றுவிட்டதை அடுத்து ஆகஸ்ட் 24ஆம் தேதியை ரிலீஸ் தேதியாக இய்க்குனர் சிவா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :