Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இது போட்டோஷாப்பில் செய்த உடம்பில்லை, ஜிம்மில் செதுக்கிய உடம்பு...


bala| Last Modified சனி, 4 பிப்ரவரி 2017 (13:27 IST)
விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் சிக்ஸ்பேக்குடன் நிற்கும் அஜித்தைப் பார்த்து, ரசிகர்கள் ஒருபுறம் பெருமிதம் கொண்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் இது வளர்த்த உடம்பில்லை, போட்டோஷாப்பில் வரைந்த உடம்பு என்று கலாய்க்கின்றனர். அஜித் அப்படியெல்லாம் ரசிகர்களை ஏமாற்றக் கூடியவரல்ல.

 

விவேகம் படத்திற்கு உடம்பை குறைக்க வேண்டும், கட்டுமஸ்தாக உடம்பை மாற்ற வேண்டும் என்று சிவா சொன்னபோதே அஜித் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தினம் 5 மணிநேரம் அவர் உடற்பயிற்சி மேற்கொண்டதாக அவரது பயிற்சியாளர் கூறியுள்ளார்.

ஆக, அஜித்தின் சிக்ஸ்பேக் போட்டோஷாப் இல்லை, ஜிம்மில் போட்டு உருக்கிய உடம்பு.

ஜுன் 23 விவேகம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


இதில் மேலும் படிக்கவும் :