வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 3 ஜனவரி 2019 (16:43 IST)

வெளியானது! விஸ்வாசம் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி

தல அஜித் நடிப்பில் உருவாகிவரும் விஸ்வாசம் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியானது. 



 
அஜித் - நயன்தாரா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். யோகி பாபு, தம்பி ராமையா, கோவை சரளா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். 
 
சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தின் விநியோக உரிமையை கேஜெஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்காக அந்நிறுவனம் பல கோடி ரூபாய்களை கொட்டி கொடுத்து வாங்கியுள்ளது என்பது ஊரறிந்த உண்மை. 
 
சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.  இந்த ட்ரைலரை தற்போது வரை 19 மில்லியன் பார்வையாளர்களை கடந்து  இணையத்தில் அபார சாதனையை படைத்து வருகிறது.
 
இந்த படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியிடப்படும் என்று தேதி குறிப்பிடாமல் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அஜித் ரசிகர்களுக்கு இன்பச்செய்தி அளிக்கும் விதத்தில் விஸ்வாசம் படக்குழுவினரால் அதிகாரபூர்வமாக ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.


 
அதாவது , விஸ்வாசம் படம் ஜனவரி 10 தேதி வெளியாகிறது என்று அப்படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் இப்போதே விஸ்வாசம் கொண்டாட்டத்தை துவங்கிவிட்டனர்.