புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 28 பிப்ரவரி 2019 (18:44 IST)

விஸ்வாசம் திரைப்படத்தால் விநியோகஸ்தர்களுக்கு இவ்வளவு லாபமா?

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தல அஜித் நயன்தாரா நடித்த திரைப்படம் விஸ்வாசம். குடும்ப சென்டிமென்ட் காரணமாக படம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 
இதனால் கடந்த ஐம்பது நாட்களாக விஸ்வாசம் திரைப்படம் பல்வேறு திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஸ்வாசம் திரைப்படம், படம் பார்த்தவர்களுக்கு மட்டுமல்லாமல் படம் எடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
 
இத்துடன் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அஜித்தின் விஸ்வாசம், தமிழ்நாடு பாக்ஸ் ஆபீசில் 75 கோடி ரூபாய் விநியோகஸ்தர் பங்காக பெற்று அதிகளவில் வசூல் செய்த படமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.