1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: சனி, 14 அக்டோபர் 2017 (18:16 IST)

‘விஸ்வரூபம் 2’ வேலைகள் தொடங்குமா?

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தின் வேலைகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 
கமல்ஹாசன் இயக்கி, நடித்த படம் ‘விஸ்வரூபம் 2’. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்த இந்தப் படம், பைனான்ஸ் பிரச்னையால் பாதியிலேயே நின்றது. சில வருடங்கள் காத்திருந்த கமல், ஒருகட்டத்தில் தானே காசு கொடுத்து படத்தை வாங்கி மீதமுள்ள வேலைகளைத் தொடங்கினார்.
 
அதற்குள் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க கமிட்டானதால், அந்த வேலைகள் அப்படியே நின்றுவிட்டன. தற்போது  நிகழ்ச்சி முடிந்துவிட்டதால், ‘விஸ்வரூபம் 2’ படத்தின் வேலைகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், கமலோ அரசியலில் பிஸியாக இருக்கிறார்.