திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2022 (10:41 IST)

“தமிழ் மொழிப் படங்களை எதிர்ப்பதில் அரசியல் இருக்கலாம்…” விஷ்ணு விஷால் பேச்சு!

முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை மற்றும் ராட்சசன் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’கட்டா குஸ்தி’. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவும் விஷ்ணு விஷாலோடு இணைந்து தயாரிக்கிறார். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனது. இதையடுத்து இந்த படம் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் “அனைத்து மொழிப் படங்களையும் நாம் வரவேற்கிறோம். ஆனால் தமிழ் மொழிப் படங்களை சில மொழிகளில் எதிர்ப்பதற்கு பின்னால் அரசியல் இருக்கலாம். இப்போது மக்கள் அதிகளவில் திரைப்படங்களில் content ஐ எதிர்பார்க்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.