வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: திங்கள், 17 ஜூலை 2017 (16:28 IST)

விஷ்ணு விஷாலின் மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசு இதுதான்…

கதாநாயகன்’ படத்துக்காக அனிருத் பாடிய பாடல்தான், விஷ்ணு விஷாலின் மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கும் என்கிறார்கள்.


 

 
ஒரு இசையமைப்பாளரின் இசையில் இன்னொரு இசையமைப்பாளர் பாடுவது என்பது இப்போதெல்லாம் சகஜமாகி விட்டது. அந்த அளவுக்கு எல்லோரும் மற்றவர்கள் மீது நட்பு பாராட்டி வருகின்றனர். விஷ்ணு விஷால் நடிப்பில் முருகானந்தம் இயக்கியிருக்கும் படம் ‘கதாநாயகன்’. இந்தப் படத்தில், ஹீரோயினாக கேத்ரின் தெரேசா நடித்துள்ளார்.

ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இன்று விஷ்ணு விஷாலின் பிறந்தநாள். எனவே, அதை முன்னிட்டு ‘ஒன் நெனப்பு’ என்ற பாடலை இன்று ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். இந்தப் பாடலை, அனிருத் பாடியுள்ளார்.