திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 1 ஜூன் 2021 (08:36 IST)

ஓடிடிக்கு வரும் விஷ்ணு விஷாலின் அடுத்த படம்!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எஃப் ஐ ஆர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் புதுமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடித்த திரைப்படம் எப் ஐ ஆர். இந்த படத்தின் போஸ்டர் சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்தது. இந்தப் படத்தில் ரைசா வில்சன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஆகிய மூன்று நடிகைகள் நடித்துள்ளனர். இயக்குனர் கௌதம் மேனன் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து ரிலீஸுக்கு தயாரான போது கொரோனாவால் திரையரங்கு மூடப்பட்டதால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.