1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2015 (20:50 IST)

விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம், எழில் இயக்குகிறார்

முண்டாசுப்பட்டிக்குப் பிறகு விஷ்ணு விஷாலின் கிராஃப் ஏறத் தொடங்கியது. இன்று நேற்று நாளை படத்தின் வெற்றி அதனை மேலும் சிறப்பாக்கியது.
 

 

சுசீந்திரன் கதையில் வீர தீர சூரன், கலக்குற மாப்ளே ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவல் விரைவில் வெளியாக உள்ளது.
 
இதையடுத்து எழில் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் விஷ்ணு விஷால்.
 
ஒரு காலத்தில் மெகா ஹிட்கள் கொடுத்த எழில் ஒருகட்டத்தில் தொடர் தோல்விகளால் காணாமல் போனார். மனம் கொத்திப் பறவை படம்தான் அவரை மீட்டு கொண்டு வந்தது. அதன் பிறகு அவர் இயக்கிய தேசிங்கு ராஜா, வெள்ளக்காரதுரை படங்கள் ஹிட்டடிக்க, பிஸியான இயக்குனர் ஆகவிட்டார்.
 
காதல், காமெடி இரண்டையும் வைத்து எழில் உருவாக்கியிருக்கும் கமர்ஷியல் கதையில் விஷ்ணு விஷால் நடிக்கிறார். படத்தின் பெயர், நாயகி மற்றும் பிற விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.