1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 8 ஜனவரி 2022 (14:40 IST)

தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுடன் இணையும் விஷ்ணு விஷால்!

தெலுங்கு நடிகர் ரவி தேஜாவோடு ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்வு செய்து வெற்றிகளைக் கொடுத்து தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். அவர் நடிப்பில் அடுத்து எஃப் ஐ ஆர் மற்றும் மோகன்தாஸ் ஆகிய படங்கள் ரிலிஸுக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில் இப்போது அவர் தெலுங்கு நடிகர் ரவிதேஜாவோடு இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இதுபற்றி டிவிட்டரில் அறிவித்துள்ள விஷ்ணு விஷால் ‘மாஸ் மகாராஜா ரவிதேஜா சாருடன்.  இந்த ஆண்டை ஒரு சிறப்பான காம்பினேஷனில் தொடங்குகிறேன். நேர்மறை எண்ணம் கொண்ட சிறந்த மனிதர். என் மேல் ஆரம்பம் முதலே நம்பிக்கை கொண்ட மனிதர். அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில். ஆனால் இப்போது பாதுகாப்பாக இருக்க வேண்டிய நேரம்’ எனக் கூறியுள்ளார்.