மறுபடியும் காக்கிச் சட்டை அணிந்த விஷ்ணு விஷால்

cauveri manickam| Last Modified செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (17:56 IST)
மூன்றாவது முறையாக, போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் விஷ்ணு விஷால். 
‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘கதாநாயகன்’, ‘பொன் ஒன்று கண்டேன்’, ‘ராட்ச்சசன்’ என 4 படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் விஷ்ணு விஷால். கடந்த வருடம் டிசம்பர் மாதம் இவர் நடித்த ‘மாவீரன் கிட்டு’ படம் ரிலீஸானது. இந்த வருடம் இன்னும் எந்தப் படமும் ரிலீஸாகவில்லை என்றாலும், விரைவில் ‘கதாநாயகன்’ படம் ரிலீஸாகும் எனத் தெரிகிறது.

விஷ்ணுவின் தந்தை, மிகப்பெரிய போலீஸ் அதிகாரி. ‘குள்ளநரிக் கூட்டம்’ படத்தில் போலீஸ் ஆவதையே லட்சியமாகக் கொண்டவராக நடித்திருக்கும் விஷ்ணு விஷால், இறுதியில் போலீஸ் ஆகிவிடுவார். தற்போது நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்திலும் போலீஸாக நடித்துள்ள விஷ்ணு விஷால், ராம்குமார் இயக்கிவரும் ‘ராட்ச்சசன்’ படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :