Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மகேஷ்பாபுவை அடுத்து தமிழுக்கு வரும் பிரபல முன்னணி தெலுங்கு நடிகர்


sivalingam| Last Modified திங்கள், 2 அக்டோபர் 2017 (00:40 IST)
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, சமீபத்தில் 'ஸ்பைடர்' படத்தின் மூலம் தமிழில் நேரடியாக அறிமுகமாகியுள்ள நிலையில் தற்போது இன்னொரு முன்னணி தெலுங்கு நடிகரான விஷ்ணுமஞ்சு தமிழில் அறிமுகமாகவுள்ளார்.


 
 
மோகன்பாபுவின் மகனும் தெலுங்கில் நல்ல மார்க்கெட்டை கைவசம் வைத்திருப்பவருமான விஷ்ணுமஞ்சு, 'குறள் 388' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுரபி நடிக்கவுள்ளார். இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் 'வோட்டர்' என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தில் சம்பத் ராஜ்,போசானி கிருஷ்ண முரளி, நாசர், பிரகதி, முனீஸ்காந்த், தலைவாசல் விஜய், பிரமானந்தம், சுப்ரீத் ஸ்ரவன், L.B.ஸ்ரீராம் உள்பட பலர் நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கின்றார்.


இதில் மேலும் படிக்கவும் :