திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (15:19 IST)

நடிகர் சங்க கட்டடத்தின் கட்டுமானப் பணியைப் பார்வையிட்ட விஷால்

நடிகர் சங்க கட்டடத்தின் கட்டுமானப் பணியைப் பார்வையிட்டுள்ளார் விஷால்.


 
 
நடிகர் சங்க கட்டடத்தைக் கட்டியே தீருவோம் என்று சொல்லித்தான் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் பதவியைக் கைப்பற்றினார் விஷால். ஒருவழியாகக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்துகொள்ள பூஜை நடைபெற்றது.
 
தற்போது கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதை நேரில் சென்று நேற்றுப் பார்வையிட்டுள்ளார் விஷால். அங்குள்ள கட்டுமானத் தொழிலாளர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து, அதை ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார் விஷால்.