திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2022 (19:21 IST)

அரசியலில் குதிக்கின்றாரா விஷால்? நீண்ட விளக்கம்

vishal
நடிகர் விஷால் திடீர் என ஆந்திர அரசியலில் குதிக்க இருப்பதாகவும் குறிப்பாக குப்பம் தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு க்கு எதிராக போட்டியிடப் போவதாகவும் ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின 
 
இந்த நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விஷால் விளக்கம் அளித்துள்ளார். ஆந்திர அரசியலில் நான் ஈடுபட இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி முற்றிலும் வதந்தி என்றும் குறிப்பாக முதல்வர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போட்டியிட போவதாக பரவும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் 
 
என்னுடைய கவனம் முழுக்க முழுக்க சினிமாவில் மட்டுமே இருக்கும் என்றும் ஆந்திர அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது